Pages

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் இன்னும் அணையவில்லை. அதிர்ச்சியில் இந்திய அரசு 

இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வழி வகுத்த கேலிச் சித்திரம். அதிர்ச்சியில் இந்திய அரசு. 

சமீபத்தில் இந்திய மத்திய அரசின் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தும் கேலிச் சித்திரம் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கேலிச் சித்திரம் தமிழர்களை முட்டாள்கள் போல சித்தரித்தது. இப்படியான ஒரு கருத்தை மாணவர்கள் மத்தியில் திணிக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது. 

ஒரு ஆண்டுக்கு முன்பு இந்திய கல்வித் துறை அமைச்சராக பதவியில் இருந்த கபில் சிபல் , இந்தியா முழுவதும் இந்தி மொழியை கட்டாய மாக்க வேண்டும் என்றும் , இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி எழுத பேசத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் . காங்கிரஸ் அரசின் இந்த இந்தி திணிப்பு செயல் திட்டத்தை பாஜகவும் விரும்பியது. பாஜக கூட்டங்களின் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று வலியுறுத்தி வந்தது. இதற்கு ஆதரவாக வட இந்திய ஊடகங்களும், இந்திய பொது மக்களை ஒரு விவாத அரங்கத்தில் கூட்டி இந்தியை ஏன் தேசிய மொழியாக நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விவாதம் செய்தது. இது ஒரு பக்க சார்பான விவாதம் தான் என்று அனைவருக்கும் தெரியும். தமிழர்களும் சிலர் இதை பார்த்து ஆமாம் சாமி போட்டனர். 

தமிழகத்திலும் சில தமிழர் விரோத தேசிய கட்சிகள் இந்தியை தமிழ் நாட்டில் கட்டாய பாடமாக்க வேண்டும் என துடித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ் மொழியை தமிழக பள்ளிக் கூடங்களில் காட்டாய மாக்கப் படக் கூடாது என்று சட்ட சபையில் வாதம் செய்தார். தமிழக முதல்வர் அது நடக்காது என்று மறுத்ததும் நமக்கு தெரிந்தே. மேலும் ஆதிக்க சக்திகள் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க கருத்து கணிப்பு என்ற பேரில் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளை முன் வைத்தது. இணையத்தில் வெளியிட்ட கருத்து கணிப்புகள் முழுவதும் இந்தி திணிப்புக்கு ஆதரவாகவே இருந்தது. கூடுதலாக இந்த இந்தி ஆதரவு சக்திகள் தமிழக அரசுக்கு கையெழுத்து விண்ணப்பம் ஒன்றும் தயார் செய்தது . இதில் ஆயிரக்கணக்கில் மக்களிடம் கையெழுத்து பெற்றதாக கூறி தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 

இதனால் இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் முனை மழுங்கி விட்டது என மத்திய அரசு நம்பியது. இதுவே நல்ல தருணம் , இந்தியை எப்படியும் திணித்து விடலாம் என்று காங்கிரஸ் அரசு ஹிந்தி மொழி மத்திய பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தான் இந்த கேலிச் சித்திரம் பிரச்சனை வெடித்தது. மத்திய அரசின் பாட புத்தகத்தில் திட்டமிட்டே திணிக்கப்பட்ட இந்த கேலிச் சித்திரத்தை வேண்டுமென்றே தமிழர்களுக்கு எதிராக வெளியிட்டது மத்திய அரசு. தமிழர்களுக்கு பல் இன்னும் கூர்மையாக தான் உள்ளதா அல்லது தமிழர்களின் பல் பிடுங்கப்பட்டு விட்டதா என்று பரிசோதிக்கவே இந்த படத்தை பாட திட்டத்தில் சேர்ந்தனர் வட நாட்டு இந்தி வெறியர்கள். 

ஆனால் தன்மானத் தமிழர்கள் இன்னும் சுயமரியாதையையும், தங்கள் இன அடையாளத்தையும் இழக்க வில்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள். இந்த போராட்டத்தை முதலில் தொடக்கி வைத்தவர் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் தான் . அவரை தொடர்ந்து சீமான், திருமா , ராமதாஸ் , கருணாநிதி என பல தலைவர்களும் இந்த கேலிச் சித்திரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசி வரை மௌனமாகே இருந்து வந்த தமிழக முதல்வரும் , தமிழ் நாட்டில் ஏற்பட்ட இந்த எதிர்பலையை பார்த்து தானும் தனது பங்கிற்கு ஒரு எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டார். 

இதில் குறிப்பிடபட வேண்டிய விடயம் , 1930 மற்றும் 1960 களில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் இன்னும் அணையாமல் அப்படியே இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது . மத்திய மாநில அரசும் அதை இப்போது உணர்ந்து கொண்டது . இனிமேலும் மத்திய அரசு இந்தியை தமிழ் நாட்டில் பல வழிகளில் திணித்து விட முடியும் என்ற கருத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளது இந்திய அரசு. இனி வருங்காலங்களிலும் தமிழ்நாட்டில் இந்தியை யாரும் திணித்து விட முடியாது என நிரூபித்து விட்டது தமிழகம் . இது தமிழகளுக்கு மற்றுமொரு வெற்றியாகும். வாழ்க தமிழ் . வளர்க தமிழ் நாடு

No comments:

Post a Comment